பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2012


விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இந்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விருப்பு வாக்குமுறைமையை இல்லாதொழித்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்தி ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.