பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


15 வயது சிறுமி மீது பாழடைந்த வீட்டுக்குள் வல்லுறவு! 19 வயது இளைஞன் கைது! யாழ்.இளவாலையில் சம்பவம்!
யாழ்ப்பாணம், இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
குறித்த இளைஞன் சிறுமியை காதலிப்பதாக நடித்து அந்த சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து இந்த குற்றத்தைப் புரிந்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக .இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் முறையிட்டதை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான இளைஞன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாடசாலை மாணவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.