பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துகின்றனர்: யாழ். பொலிஸ்மா அதிபர் புகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு இடையூறுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது வீதியோரமாக நின்று ஜனநாயக முறைப்படி போராட்டத்தை நடத்துகின்றனர்.