பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2012

ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளானது: 14 பேர் கடலில் மூழ்கி பலி
ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக குடியேற சென்ற மொராக்கோ நாட்டினர் 14 பேர் கடலில் மூழ்கி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோ நாட்டிலிருந்து 70 பேர் கொண்ட குழுவொன்று படகின் மூலம் மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவிற்குள் குடியேற சென்றுள்ளது.
மொராக்கோ கடல் எல்லையில் ஸ்பெயின் நாடு அருகே சென்ற போது, அவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்துவிட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்பெயின் கடற்படையினர் தத்தளித்துக் கொண்டிருந்த 17 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களை விமானப்படை மூலம் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.