பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2012


அரசியல் கட்சியாக பதியும் விடயத்தை ஒத்திவைக்க த.கூ. கட்சிகள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக் கிடையிலான கூட்டம் இன்று மாலை கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது கூட்டம் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சியாக பதியும்
விடயத்தை இப்போதைக்கு ஒத்திவைப்பதாக கட்சித்தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் வலியுறுத்தியதை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, மற்றும் அண்மையில் இணைந்து கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டன.
முக்கிய அரசியல் விடயங்கள் பற்றியும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள் என்பன இருப்பதால் இப்போதைக்கு இந்த விடயத்தை பெரிது படுத்தாது ஒத்திவைக்குமாறு இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த சம்பந்தன் கேட்டுக்கொண்டதாகவும் இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கி கொண்டன என அக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித்தலைவர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, சித்தார்த்தன், ஆனந்தசங்கரி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கனடாவுக்கு சென்றுள்ளதால் அவர் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.thx tinakatir