பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2012

சானியா-நூரியா ஜோடி 2-ம் இடம் பிடித்தது
 சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி 2-ம் இடம் பிடித்தது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில்

சானியா மிர்சா-நூரியா லாகோஸ்டரா வைவ்ஸ்(ஸ்பெயின்) ஜோடி, 3ம் தரநிலை ஜோடியான ரஷ்யாவின் ஏகாட்டரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இப்போட்டியில் சானியா ஜோடி 5-7, 5-7 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா, தனது கடைசி வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்த சீசனில் அவர் 2 பட்டங்களை (பட்டாயா, பெல்ஜியம்) வென்றுள்ளார். மற்ற இரண்டு போட்டிகளில் (இண்டியன்வெல்ஸ், துபாய்) 2-ம் இடத்தைப் பிடித்தார்.