பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2012


"உலகக் கிண்ணம் எங்களுடையது, இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும்"கிறிஸ் கெய்ல்
 





உலகக்கிண்ணம் எங்களுடையதுதான். இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும். நாம் இலங்கையை நேசிக்கிறோம். ஆனாலும் இந்த உலகக்கிண்ணத்தை நாங்களே பெற்றுக்கொள்ளப்போகிறோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்ட வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ் கெய்ல் பகிரங்கமாக இக்கருத்தினை வெளியிட்டார்.

"இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. இலங்கை வீரர்கள் வெறுங்கையுடனேயே திரும்புவார்கள்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.