பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2012

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர் கல்வி அமைச்சுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முடிவுற்றவுடன் மூன்றாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.