பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012

இலங்கை நட்சத்திர ஓட்டலில் கிறிஸ் கெய்லின் தோழி கைது
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் பெண் நண்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் பெண்களும் கெய்ல் மற்றும் அவரின் சகவீரர்களான ஆண்டரி ரஸ்ஸல், பிடல் எட்வர்ட்ஸ் மற்றும் டிவைன் ஸ்மித் ஆகியோரின் தோழிகளாவார்.
இந்த பெண்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை
என்று மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் ஓட்டல் விதிகளை மீறியதால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.