குழந்தை பெற்றதற்கு பின்பு நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படம் இதுவாகும்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார்.பின்னர் பாலிவுட்டில் புகழ் பெற்று விளங்கினாலும் தமிழில் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டார்.
கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார்.
குழந்தை பெற்றெடுத்த பின்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்துக் கொடுத்தார்.
இந்நிலையில் 1938ம் ஆண்டு கால நாவலான ரெபக்காவை படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் மணிரத்னம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. |