பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2012

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வைத்து கொலை செய்ய திட்டமிட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு உடந்தையாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு 35 வருடகால
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

மேற்படி விசாரணை குறித்து கேகாலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேனகா விஜேசுந்தரவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி பெண்ணுக்கு உதவியளித்தமை என நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ரம்புக்கணை பகுதியைச் சேர்ந்த எஸ்.சூரியகுமார் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தற்கொலைத் தாக்குதலில் முன்னாள் இராணுவத் தளபதி பலத்த காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.