பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012



வேலைக்கு திரும்பும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவரென உயர் கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது
.அமைச்சரின் அறிவித்தலை நிராகரித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் தாம் வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக கூறியுள்ளது.
அமைச்சின் முன்மொழிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளபோதிலும், சிலர் மனம் மாறி வேலைக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும் அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன
கூறினார்.
இத்தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் தொடர்பிருப்பதாகவும் இந்தளவில் அவர்களின் 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மல்வத்த மற்றும் அஸ்கிரியபீட மகாநாயக்கர்களின் இணக்க முயற்சிகளை தாம் ஆதரிப்பதாகவும் ஏனைய முயற்சிகள் தோல்வியடையின் மகாநாயர்களுடன் பேசுவதற்கு திகதி குறிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செலவை அதிகரிக்கவும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கென விசேட கல்விச்சேவையொன்றை உருவாக்கவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் முன்மொழிவுகள் தெளிவில்லாமலிருப்பதாகவும் இவை தமது கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லையெனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.