பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2012


இலங்கை யுவதிகள் இருக்கும் 51 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்



இலங்கை இளைஞர் யுவதிகள் காணப்படும் 51 ஆபாச இணையத்தளங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இணையத்தளங்களை இலங்கையில் தடை செய்யுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரியுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவின் இக்கோரிக்கை குறித்து விசேட நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அந்த பரிசீலனையின் பின் இறுதி முடிவை எடுக்க சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைக் கோரிப்பட்டுள்ளது.
ஆலோசனை கிடைத்தபின் குறித்த இணையங்களை முடக்குவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 31ம் திகதி முடிவு செய்யப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில ஆபாச இணையங்களில் பாடசாலை மாணவர்கள் தமது சீருடையுடன் காணப்படுவதாகவும் 51 இணையங்களில் சுமார் 1000 வீடியோக்கள் காணப்படுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ன்றி-அத தெரண – தமிழ்