பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


என் உயிருக்கு ஆபத்து ; நித்தி சீடர்களை வெளியேற்றுங்கள்: மதுரை ஆதீனம் போலீசில் பரபரப்பு புகார்
மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.அம்மனுவில்,  ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாகநியமித்தேன்.    சில காரணங்களால் நாளை நான்,  நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

இதனால் மடத்திற்குள்  இருக்கும் நித்தியானந்தா சீடர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.  எனவே, நித்தியானந்தா சீடர்களை இன்று இரவுக்குள் வெளியேற்றி என் உயிரை காப்பாற்றுங்கள்.   

என் மடத்திற்கு தக்க பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றுங்கள்’’ என்று கூறியுள்ளார்.இந்த புகார் குறித்து விளக்குத்தூண்டு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆதீனமடத்திற்குள் விரைந்து
சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.