பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு நிதி உதவி
கிளிநொச்சியில் இந்த ஆண்டு க.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் 100 பேருக்கு சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் ஒரு தொகுதி நிதியை வழங்கியுள்ளனர்.
இந்த நிதி அண்மையில் குருகுல பிதா அப்புஜி ஜனன தின நிகழ்வில், மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கல்வி பணிப்பாளர் த.குருகுலராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் செல்வராஜா மற்றும் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், கொழும்பு றோயல் கல்லூரி பிரதி முதல்வர் மா.கணபதிப்பிள்ளை, முன்னாள் அரசாங்க அதிபர் இராசநாயகம் என பல சமுக ஆர்வலர்கள் கல்விபுலம் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இந்த உதவிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
இங்கு உரை நிகழ்த்திய பா.உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்தின் தொடக்க காலங்களில் கல்வி வளர்ச்சி மாணவர்களின் பண்பாடு போன்றவற்றில் குருகுலத்தின் பங்கு பணிகள் பற்றியும் பின்னாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆளுமை மிகுந்த ஆள்புலத்தில் தொடக்ககால தாக்கங்கள் விளைவுகள் பற்றியும் கருத்துக்களை தெரிவித்தனர்.