பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கூட்டமைப்பு கட்சியை பதிவு செய்வது தொடர்பில் மீளவும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு நிலைப்பாட்டையும் ஏனைய கட்சிகள் மற்றொரு நிலைப்பாட்டையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.