பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2012


இராணுவம் யாழ்ப்பாணத்தில் எங்கும் முகாம் அமைக்கலாம்!- ஈ.பி.டி.பி மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைக்க முடியும். அவர்களை யாரும் தடுத்து விட முடியாது. என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
சிங்கள மகாவித்தியாலயக் காணியை ஆக்கிரமித்து இராணுவம் பாரிய படை முகாம் அமைக்கும் பணியை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இம் முகாம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில இராணுவத்தினர் சிங்கள மகா வித்தியாலயத்தின் காணிகளை அபகரித்தே முகாம் அமைத்து வருகின்றனர்.
அரியாலை கொழும்புத்துறை குருநகர் ஆகிய பகுதிகளிலுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கவே யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் இராணுவம் முகாம் அமைக்கின்றது
இலங்கையில் எந்த இடத்திலும் இராணுவம் விரும்பினால் அரச காணிகளில் முகாம் அமைக்கலாம் இதனை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார்.