பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2012


விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு
மு்ன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.1998ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளான லயன் எயார் விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராளி இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரணை தீவு கடற்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் எச்சங்களை தேடும் நடவடிக்கையில் இலங்கையின் கடற்படை சுழியோடிகளால் ஈடுபட்டனர்.
இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலாலியில் இருந்த புறப்பட்ட 10 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயர்- 602 விமானத்தில் பயணம் செய்த 48 பொதுமக்களும், 2 உக்ரேனிய விமானிகள் உள்ளிட்ட 6 விமானப் பணியாளர்களும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.