பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2012

பள்ளிவாசல் எரிப்புச் சம்பவம் : உலமா சபை கண்டனம்
ஹஜ்ஜுப் பொருநாள் தினத்தன்று அதிகாலை அநுராதபுரம் மல்வத்து ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசல் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை ஜம் இய்யத்துல் உலமா சபையினர்,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் இதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
 

இதேவேளை, வடமத்திய மாகாண முதலமைச்சர் இத
னை நேரடியாகச்சென்று பார்வையிட்டுள்ளதுடன் அதனை புனரமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து உலமா சபை அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பள்ளிவாசல்களுக்கெதிரான தக்குதல்கள் இடம்பெறமாட்டாதென பொறுப்புவாய்ந்தவர்களால் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் சம்பவங்கள் மேலும் இடம்பெற்றுவருகின்றன.

மக்கள் தத்தமது சமயங்களை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டுக்குத்தேவையான நாட்டுப்பற்றுள்ள சமுதாயம் உருவாகும். இதுவே நாட்டின் அபிவிருத்திக்கு வழிகேலுவதாக அமையும்.

இதுவரை சுமார் ஆறு பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தேற்றுவிக்க ஏதுவாக அமையும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுப்பதற்கு நாட்டின் தலைவர்களுடன் பேசி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென உலமா சபை கேரிக்கை விடுப்பதுடன் அநுரதபுர பள்ளிவாசல் எரிப்புச் சம்பவத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.