பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2012


ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு முன் பல கேள்விகள் காத்திருக்கின்றன
எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு இடம்பெறும் போது இலங்கையிடம் கேட்பதற்காக பல நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மெக்சிக்கோ, செக் குடியரசு, நெதர்லாந்து போன்ற நாடுகளும் இதில் அடங்குகின்றன.
இந்தநிலையில் குறித்த அமர்வின்போது 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஒரு நாட்டுக்கு 72 செக்கன்களே தமது கருத்தை தெரிவிக்க ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கேள்விகேட்டல் நேரத்தின் போது இலங்கையின் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை ஏன் அரசாங்கம் காலந்தாமதிக்கிறது என்ற கேள்வி பல நாடுகளால் எழுப்பப்படவுள்ளது.
இதனைத் தவிர,
சனல் 4 காணொளியில் காட்டப்பட்ட கொலைகள் குறித்த விசாரணைகள்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் நடைமுறைகள்,
திருகோணமலையில் 2006 ம் ஆண்டு கொல்லப்பட்ட 5 மாணவர்களின் விசாரணைகள்,
மூதூரில் கொல்லப்பட்ட 17 தன்னார்வ பணியாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள்,
பொத்துவிலில் 2006 ம் ஆண்டு 10 தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை,
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை,
காணாமல் போன காட்டுன் செய்தியாளர் பிரகீத் எக்னெலிக்கொட தொடர்பான விசாரணைகள்,
போன்றவை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.
2012 ம் ஆண்டு செப்டம்பரில் வவுனியா மெனிக்பாம் அகதி முகாம் மூடப்பட்டு அந்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமை மற்றும் அவர்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய மீள்குடியேற்றப்படாமை தொடர்பில், கனடா கேள்வி எழுப்பவுள்ளது.
இந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் நீதிமன்றங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் தகவல்களை தருமாறு பிரித்தானியா கோரவுள்ளது.
இந்தக் கேள்விகளை அடுத்து எதிர்வரும் நவம்பர் 5 ம் திகதியன்று இலங்கை தொடர்பான தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்படவுள்ளது.