பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012


ஆதீனத்தின் காலைப்பிடித்து நித்தி சீடர்கள் கதறல்
நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று மதுரை ஆதீனம் முடிவெடுத்துவிட்டார்.  இதனால் அவரது உயிருக்கும், மடத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்.  இதையடுத்து அவர், மடத்தில் தங்கியிருக்கும் நித்தி சீடர்களை வெளியேற்றக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனால், நித்தியின் தலைமை சீடர் ரிஷி தலைமையில் 10க்கும் மேற்பட்ட நித்தி சீடர்கள் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலில் விழுந்து,  இன்று ஒருஇரவு மட்டும் பொருத்துக்கொள்ளுங்கள்.   நாளை பேசி சரி செய்துகொள்ளலாம் என்று கதறினார்கள்.  
ஆனாலும் அருணகிரிநாதர் அதற்கு சம்மதிக்காததால்,  போலீசார் நித்தி சீடர்களை மதுரை ஆதீன மடத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.