பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012

தேமுதிக எம்.எல்.ஏக்கள் :விஜயகாந்த் ஆவேசம்
அதிமுக விரித்த வலையில் விழுந்துகொண்டேயிருக்கும்

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர்.

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று  சந்தித்தனர்.

இந்நிலையில்,   திரைப்பட தயாரிப்பாளரும், ராதாபுரம் தொகுதி எம்.ஏல்.ஏவுமான மைக்கேல்ராயப்பன், நடிகரும், பேராவூரணி தொகுதி அருண்பாண்டியன் ஆகிய இருவரும் இன்று முதல்வரை ‌அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜயகாந்த் பதில் கூற மறுத்தார்.  தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,  அவர் ஏதும் கூறாமல் ஆவேசமாய் சென்றுவிட்டார்.