பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012


இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி, இராமநாதபுரத்திலுள்ள
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த திரைப்படத் தயாரிப்பாளர் சென்னை விருகம்பாக்கத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கீயூ பிரிவு தகவல்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட இந்த திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து எட்டு போலி கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பட தயாரிப்பிற்காக தான் பட்ட கடன் சுமை தாங்க முடியாமலேயே இப்படியான வேலையில் ஈடுபட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் அகோரம் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவரது தம்பியும் இவ்வாறு ஆட்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டார்.