பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012


இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள ஆவணம் சட்டபூர்வமானது!- மொஹான் பீரிஸ்
இலங்கை தயாரித்த மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டு திட்டம் சட்டபூர்வமானதொரு எழுத்து ஆவணம் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர், ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறந்த பல வேலைத்திட்டங்கள் தற்சமயம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்சமயம் மீள் எழுச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி போராளிகளில் 635 பேருக்கே இன்னமும்  புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.