பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப்

போராட்டத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த இரு தாய்மார் குதித்துள்ளனர்.

ஒஸ்லோவில் அமைந்துள்ள பிரம்மாண்டமானதும் முதற்றரமானதுமான டொம் என்ற கிறிஸ்தவ தேவாலய்த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தாய்மாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நோர்வே பொலிஸாரால் எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார் தமது பிள்ளைகளை தம்மிடத்தில் ஒப்படைக்கும் வரையில் அங்கிருந்து நகரப்போவதில்லையென்று உறுதியாக இருப்பதாகவும் ஒஸ்லோவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறன.

இதேவேளை நோர்வேயில் தற்போது சூடுபிடித்துள்ள சிறுவர் காப்பக விவகாரம் தொடர்பில் பதிலளிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறிருப்பினும் நாளை புதன்கிழமை இலங்கையின் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.