பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


கும்பகோணம்: கோவில் யானை ஊழியரை தாக்கி கொன்றது 

கும்கோணம் அருகே உள்ள ஆடுதுறை புதூரைச் சேர்ந்தவர் சேகர். இவர் திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோவிலில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மதியம் சேகர் கோவிலுக்கு சொந்தமான யானை நிற்கும் இடம் வழியாக சென்றார். அப்போது திடீரென அவரை துதிக்கையால் பிடித்து இழுத்தது. பின்னர் தூக்கி வீசியது.

இதில் சம்பவ இடத்திலே சேகர் பரிதாபமாக இறந்தார். கோவில் ஊழியரை யானை தூக்கி வீசி கொன்ற சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. யானை தூக்கி வீசி கொன்ற சேகருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் புதூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து உள்ளார்.