பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


நடிகர் விஜய் 15 ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் 
ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, நாளை (27-ம்தேதி) இலவச திருமணம் நடைபெறுகிறது.
 

இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டு, 15 ஏழைப் பெண்களுக்கு, 51 சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில், பரிமளம் பள்ளி அருகே காயத்ரி ப்யூல்ஸ் மை தானத்தில், நாளை காலை 8 மணி முதல் 11 மணிவரை நடைபெறவுள்ள விழாவிற்கு, விஜய் மக்கள் இயக்க நிறுவனரும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

இயக்கத்தின் மாநில பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த், மாநில செயலாளர் ரவிராஜா, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 15 ஏழை பெண்களுக்கு, சீர்வரிசைகளை வழங்கி, திருமண நிகழ்ச்சியை, விஜய் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.