பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2012


விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்ச
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மொனராகலை மாவட்ட நீதிமன்றில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் பிளேட் ஒன்றினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் மொனராகலை சிரகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியா உயர் நீதிமன்றில் இதேபோன்று நபர் ஒருவர் பிளட்டினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.