பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012


இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு கடிதம்!
இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்;த 20 ஆம் திகதி எழுதப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் கடிதத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு குறித்து பிரதமர், தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிரதமர், கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையில்
இறுதிகட்ட போர் முடிவுற்ற பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம்.
அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.