பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012


தற்கொலை செய்துகொண்​ட மருத்துவபீட மாணவனின் உடலத்திற்கு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்​கள் அஞ்சலி
முல்லைத்தீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மருத்துவபீட புகுமுக மாணவனான தங்கவேலாயுதம் தஞ்சுகனின் பரீட்சைப் பெறுபேறுகளின்
குளறுபடிகளாலும், குடும்ப நிலையினாலும் விரக்தியடைந்து கடந்த மாதம் 28ஆம் திகதி தூக்கிட்ட தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் அம்மாணவனின் உடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது அஞ்சலி உரை ஆற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, கல்வி வளம் மிக்க மாணவர்களின் இப்படியான முடிவுகள் வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அஞ்சலி உரையை ஆற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஏனைய மாணவர்கள் இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் எமது இனத்தின் பொக்கிஷமான கல்வியை இழந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
இதன்போது முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசசபையின் தலைவர் செந்தூரன், வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் உபதலைவர் சஜீவன் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.