பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012


மாந்தீரிக வேலைகளில் ஈடுபட்ட மூன்று பெண்கள் பொது இடத்தில் எரித்துக்கொலை 
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் துப்ரஜபூர். இங்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடந்த 6 மாதமாக மாந்தீரிக வேலைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த அப்பகுதி கிராம கங்காரு சபை அந்த மூன்று பெண்களுக்கும் பல முறை அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் ஒரு இளைஞர் இறப்புக்கு காரணம் அவர்களின் சூன்யவேலை என்று அந்த கிராமத்தினர் கருதியுள்ளனர்.

இதனால் கொதிப்படைந்த அவர்கள், கடந்த திங்களன்று இரவு தாயார், மகள் மற்றும் அவர்களது உறவுக்கார பெண் என மூன்று பேரையும் ஒரு பொது இடத்தில் நிறுத்தி உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.


மூன்று பெண்களும் இறந்து கருகிய நிலையில் அங்கு ஒரு மறைவிடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இச்செய்தி போலீசாருக்கு தெரியவர அந்த பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.