பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2012

கைதிகளின் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் பலியான 16 கைதிகளின் சடலங்களில் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சடலங்களை அடையாளம் காணுவதற்காக கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் குழுமியுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டுள்ள 11 சடலங்களில் பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 கைதிகளின் சடலங்கள் வைத்தியசாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையி;
ன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.