வெலிக்கடைச் சம்பவம்: இரு வெளிநாட்டவர் உட்பட 3 தமிழ் கைதிகள் பலி
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றசம்பவத்தில் பலியான 27 பேரில் இருவர் வெளிநாட்டவராவர். மேலும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
சிங்கபூர் நாட்டைச் சேர்ந்த இந்திய பிரஜை ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
மற்றும் ஒரு வெளிநாட்டு பிரஜை உயிரிழந்துள்ளதோடு குறித்த நபரின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 43 பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.