பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012



அரசு மரியாதையுடன் பால்தாக்கரே உடல் தகனம் 


 
உடல் நலக்குறைவால் 17.11.2012 மாலை மரணமடந்த சிவசேனைத் தலைவர் பால் தக்கரேவின் உடல் 18.11.2012 மாலை மாலை 6.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப் பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மந்திரங்கள் ஓத, பாடல்கள் இசைக்கப்பட, அவரது உடல் சிதையில் வைக்கப்பட்டது.

பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே சிதைக்குத் தீ மூட்டினார். லட்சக் கணக்கான மக்கள் இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.