பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


பால்தாக்கரேவின் மறைவால் மும்பையில் கார், ஆட்டோக்கள் முற்றிலுமாக இயங்கவில்லை
86 வயதான சிவசேனா தலைவர் பால்தாக்கரே மும்பையில் 17.11.2012 மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க 15 கம்பெனி சிறப்புக் காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால்தாக்கரேவின் மறைவால் மும்பையில் கார், ஆட்டோக்கள் முற்றிலுமாக இயங்கவில்லை.