பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக பிரண்டன் மெக்கலம் 68 ஓட்டங்களையும் பிளயின் 53 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் எவரும் எதிர்பார்க்குமளவிற்கு ஆடவில்லை.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏரங்க 3 விக்கெட்களையும் குலசேகர 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பரணவிதாரண மற்றும் ரன்தீவ் ஆகியோர் களத்திலுள்ளனர்.