பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012

ஆஸி.யிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்
அவுஸ்திரேலியாவிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 

இவர்கள் அனைவரும் விசேட விமானமொன்றின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் 49 பேரும் தமிழர் ஒருவரும் அடங்கியுள்ளனர். கம்பஹா 9, களுத்துறை 1, ஹம்பாந்தோட்டை6, மாத்தறை19, புத்தளம்13, திருகோணமலை 2 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை, விமானநிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.