பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு செட்டித்தெருவில் அஞ்சலி! புதன்கிழமை இறுதிக் கிரியை!
நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று முற்பகல் 11 மணியளவிலிருந்து 12 மணிவரை பூதவுடல் செட்டியார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு செட்டியார் தெருவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முற்பகல் மூடப்பட்டிருந்தன.
அத்துடன் நகைக்கடைத் தொழிலாளர்கள் அனைவரும் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பு - செட்டியார் தெருவின் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரன் கடந்த 30ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் 31ம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 53வயதான குறித்த நபர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.