பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மீள சிந்திக்க வேண்டும்: மஹாநாயக்க தேரர்கள்
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள சிந்திக்க வேண்டுமென இலங்கையின் மிக முக்கியமான பௌத்த மஹாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து கவனம் செலுத்துமாறு கோரியுள்ளனர்.
நீதிமன்றம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதறடிக்கக் கூடிய வகையில் செயற்படாது பொறுமையுடன் செயற்படுமாறு மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
கடிதம் ஒன்றின் மூலம் மஹாநாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கண்டி அஸ்கிரி பீடாதிபதி, மல்வத்து பீடாதிபதி, அபுரபுர நிக்காயவின் பீடாதிபதி, ரமன்ய மஹா நிக்காயவின் பீடாதிபதி உள்ளிட்ட முக்கிய மஹாநாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பௌத்த மத விழுமியங்களுக்கு அமைவாக நியாயமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.