பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2012

திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் பகல் 12.10 மணியளவில் வந்த குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவர்கள் அனைவரும் பெருபான்மை இனத்தைச் சேர்ந்த ஆண்களாவர். இவர்கள் மாத்தறை 5, கம்பஹா 1, களுத்துறை 3, புத்தளம் 14 மற்றும் அம்பாறை 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.