பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2012

யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கான புகையிரதப்பாதை புனரமைக்கும் வேலைகள் யாழ். குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.


தற்போது கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் தண்டவாளங்கள் கொண்டுவரப்பட்டு பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகளவான நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு பாதை அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.