பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012


மது கிண்ணம் உடைந்து குத்தியதில் மணமகன் சாவு: திருமண நாளிலேயே இந்த சோகம்
லண்டனை சேர்ந்த பேபியோ ஜெபர்சன் (வயது 33) என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மணமகன் பேபியோ ஜெபர்சன் விருந்தினர்களுக்கு தானே மது சப்ளை செய்தார். மது கிண்ணம்
ஒன்று தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த படி மது சப்ளை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மது கிண்ணம் உடைந்து அவரது மேல் தொடைப் பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடையில் உள்ள ரத்தக் குழாய் துண்டித்து அதில் இருந்து ரத்தம் கொட்டிய படி இருந்தது. 
அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் வழியிலேயே அவர் உயிர் இழந்தார். திருமண நாளிலேயே இந்த சோகம் ஏற்பட்டதால் அனைவரும் கண் கலங்கினார்கள்.