பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012

கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

 
இலங்கை அரசு தொடர்ந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேச மறுத்துவருகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அந்தக் குழு,  தமிழர் பிரச்சினைக்குத்தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடனடியாகப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் இராணுவ நிர்வாகத்தை அகற்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் உடனடியாக நடத்தி, அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் உரிய அதிகாரப்பகிர்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் சர்வதேசக் குழுவின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. 
 
இதற்கு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு நேற்றுமுன்தினம் பிரஸல்ஸில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
அதில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:
 
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு உறுதிமொழிகளை புறக்கணித்து வருகிறது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிராது தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களை இராணுவமயமாக்கி அங்கு அபிவிருத்திகளையும் இழுத்தடித்து வருகிறது.
 
போர் முடிவடைந்த பின்னர், தமிழ்க் கட்சிகள் மத்தியில் திறந்த அரசியல் நகர்வுகளுக்கான களம் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு, இடமளிக்கவில்லை. மாறாக, சிங்களத் தேசியவாதிகளை ஊக்குவிக்கும் அரசு அவர்கள் மூலம் நியாயமான தமிழர் கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
 
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் ஆகியோருக்கு உறுதியளித்த இணக்கப்பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, சிங்கள வாக்குகளை மையமாக் கொண்டு இலங்கை அரசு செயற்பட்டு வருகிறது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு காரணமாக அங்கு மாகாணசபை தேர்தலை அரசு பிற்போட்டு வருகிறது. அத்துடன் மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.