பக்கங்கள்

பக்கங்கள்

5 நவ., 2012


பாடசாலைச் சீருடை அணிந்து கையில் மதுபானப் போத்தல்களோடு நின்று இளம் பெண்கள் மற்றும் மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



யாழ். நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களே இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் குறித்த மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னரே இந்தத்திருவிளையாடலில் இறங்கியுள்ளனர்.

இந்த ஆறு மாணவர்களும் தமது பாடசாலையை அண்மித்துள்ள ஒழுங்கையில் நிலையெடுத்துக் கொண்டனர். பின்னர் கைகளில் மதுப் போத்தல்களை ஏந்தியபடி அந்த வழியால் சென்றுவரும் இளம் பெண்கள், மாணவிகளுடன் "கிளுகிளுப்பான' வார்த்தைப் பிரயோகங்களுடன் தங்களது கைவரிசையைக் காட்ட முற்பட்டனர்.

இந்த நிலையிலேயே அந்தப்பகுதியூடாக ரோந்து சென்ற யாழ். பொலிஸாரிடம் 6 மாணவர்களும் கையும் மெய்யு மாகச்சிக்கினர். குறித்த மாணவர்கள் மது அருந்தியதை உறுதிப் படுத்த, அவர்களை பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.