பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012

வலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார்
. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் படையினர் தடுத்து நிறுத்திய வேளை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வலம்புரிச் செய்தியாளர் சாளினை அழைத்த படையினர், அவரிடமிருந்து புகைப் படக் கருவியை கேட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர் வைத்திருந்த செய்தியாளருக்கான அடையாள அட்டையையும் கிழித்தெறிந்தனர். இச் சம்பவத்தின்போது வேறு சில ஊடகவியலாளர்களும் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.