பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க
முற்பட்டபோது அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேரணியில் ஈடுபட முயற்சித்தவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்ட னர். அதற்கு செவி சாய்க்காத மாணவர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அவர்களை பலவந்தமாக விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்தே பொலிஸார் தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என எரிக் பெரேரா கூறினார். இதேவேளை மாணவர்களை கலைப்பதற்காக சென்ற பொலிஸாரின் ஒத்துழைப்புக்காகவே இராணுவமும் அப்பகுதிக்குச் சென்றது என்று யாழ்.இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.