பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2012


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் பிரதம டி.எம். ஜயரட்னவை பார்வையிடும் நோக்கில்,ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
கஸகஸ்தான் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இராஜதந்திர ரீதியான அல்லது உத்தியோகபூர்வமான விஜயமாக ஜனாதபதியின் அமெரிக்க விஜயம் கருதப்படவில்லை.
பிரதமரை பார்வையிடும் நோக்கிலேயே ஜனாதிபதி இவ்வாறு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.