பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2012


எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ய எடியூரப்பா திடீர் முடிவு!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அடுத்த மாதம் 10ம் தேதி தான் தலைவராக பொறுப்பேற்க உள்ள கர்நாடக ஜனதா கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என அறிவித்தார்.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் 5ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் தேதி திங்கள் கிழமை என்பதால் அன்றைய தினம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். கட்சி துவக்க விழாவில் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால் துவக்க விழாவை 9ம் தேதிக்கு மாற்றினார். 

இந்நிலையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் இந்த மாத இறுதிக்குள் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் எடியூரப்பா அறிவித்துள்ளார். புதிய கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்தார்.