இலங்கை இறுதி யுத்தத்தின்போது ஐ.நா பணியாளர்கள் வெளியேறிய குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை |
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபை உரியமுறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் கடுமையயாக நடைபெற்ற 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில், வன்னி யுத்த வலயங்களில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைப் பணியாளர்கள் வெளியேறினர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், ஐ.நா சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டின்போது, இன்னர் சிற்றி பிரஸ் குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியது. அதற்குப் பதிலளித்த ஐ.நா அலுவலர் ஜில்லியன் கிட்லி, குறித்த குற்றச்சாட்டு தொடாபில் தற்போதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பதிலளித்தார். |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼