பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2012


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கவேண்டும் : சுப்பிரமணியசாமி மனு மீதான விசாரணை 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர்செல் பங்குகளை விற்றதில்
விதிமுறை மீறப்பட்டுள்ளது.

சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது நடந்த இந்த ஒப்பந்தத்தினால், அவரது மகன் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும் என்று தனது மனுவில் சுப்பிரமணியசாமி கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது ஏர்செல் பங்குகள் விற்பனை செய்ததில் முன்னாள் மந்திரி தயாநிதிமாறன், ப.சிதம்பரம் ஆகியோரின் பங்கு குறித்து சுப்பிரமணியசாமி வாதிட்டார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை அறிக்கையும் இன்று தாக்கல் செய்யபப்ட்டது. இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது..